ேசவல் சண்டை நடத்திய 4 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி; பணம் வைத்து சேவல்சண்டை நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம், புலியூர் காட்டுசாகை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள முந்திரி தோப்பு போலீசாரை பார்த்ததும் சிலர் ஓடினார். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். இதில், புலியூர் காட்டுசாகை குபேந்திரன்,19; வடக்குத்து மலர்மணி,26; விழுப்புரம் வினோத்குமார், 30, அண்ணாமலை நகர் மணிமாறன், 35; என்பதும், பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து. 2 சேவல்கள், 400 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.