மேலும் செய்திகள்
ஆல்பேட்டை செக்ஸ்போட்டில் எஸ்.பி., அதிரடி ஆய்வு
14-Jan-2025
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது, போக்குவரத்து விதிமுறை மீறியதாக1517 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அபராதம் விதித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த 14ம் தேதி தைப் பொங்கல், 15ம் தேதி மாட்டுப் பொங்கல், நேற்று 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து, நாளை ஆற்றுதிருவிழாவும் கொண்டாடப்படவுள்ளது. கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் ஆற்றுத்திருவிழாக்களில் எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 9 டி.எஸ்.பி.,க்கள், 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். இதை தவிர்த்து, கூடுதலாக மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வது, கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களில் மாவட்டத்தில் 35 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 834 மதுபாட்டில்கள் மற்றும் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று, போக்குவரத்து விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதன்படி, ஓவர் ஸ்பீடு 37, சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தபோது சென்றதாக 77, மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 42, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 33, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்றதாக 1 மற்றும் ெஹல்மெட் அணியாமல் சென்றதாக 857, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 9, பொய்யான நம்பர் பிளேட் பயன்படுத்தியதாக 18 வழக்கு உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறியதாக 1517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
14-Jan-2025