உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு

சிதம்பரத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு

சிதம்பரம்; சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனைச் சங்கத்தில் கால்நடைகளுக்கான தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையினை அமைச்சர் திறந்து வைத்தார். சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கால்நடைகளுக்கான குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி முன்னிலை வகித்தார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தொற்சாலையை திறந்து வைத்து, தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையை துவக்கி வைத்து பேசும் போது, ''கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான உளுந்து பதனிடும் ஆலையிலிருந்து கிடைக்கப்பெறும் உப பொருளான உளுத்தம் தவிடினை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் பொருட்டு கூட்டுறவு பதனிடும் சங்கங்களில் பெறப்படும் உப பொருட்களை பயன்படுத்தி கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.19.53 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் உளுத்தம் தவிடு, மக்கா சோளம், அரிசி தவிடு, கோதுமை தவிடு, சமையல் உப்பு, புண்ணாக்கு, வெல்லபாகு ஆகிய உபபொருள்களை கொண்டு தீவனம் தயாரிக்கப்படுகிறது. இங்கு கிடைக்கும் உப பொருள்களை கொண்டு அப்பளம், செக்கு நல்லெண்ணெய் மற்றும் செக்கு கடலை எண்ணெய் ஆகியவை பொதுமக்களுக்கு தரமான முறையில் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்று பேசினார். நிகழ்ச்சியில், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, கூட்டுறவு துணைப் பதிவாளர் ரங்கநாதன், இணை பதிவாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் சிவகுருநாதன், கள அலுவலர் குமரகுரு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ராஜமுத்து, சங்க மேலாளர் அண்ணாதுறை, முன்னாள் பொது மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அம்பு சந்திரசேகரன், வெங்கடேசன், தாரணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி