மேலும் செய்திகள்
தேனி , தஞ் சையில் கே.வி., பள்ளிகள்
07-Dec-2024
மாவட்ட அளவில் வினாடி - வினா போட்டி
07-Dec-2024
கடலுார் ; கடலுாரில் மேலும் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் தொகுதி எம்.பி., விஷ்ணுபிரசாத், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, 'கடலுார் மாவட்டத்தில் என்.எல்.சி.,யில் மட்டும் ஒரே ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. கடலுார் துறைமுகம் மேம்படுத்த உள்ளதால் அங்கு ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக, மத்திய அமைச்சர் உறுதியளித்தார் இதற்கிடையில் லோக்சபாவில், கடலுாரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது பற்றி எம்.பி., விஷ்ணுபிரசாத் கேள்வி எழுப்பினார்.அதற்கு, 'தற்போது தமிழகத்திற்கு இரண்டு பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடலுாரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க ஆய்வு மேற்கொண்டு பரிசீலனை செய்யப்படும்' என, மத்திய கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
07-Dec-2024
07-Dec-2024