உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலம்பம் பயிற்சி நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ்

சிலம்பம் பயிற்சி நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ்

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் இலவச சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை சேர்மன் ஜெயந்தி வழங்கினார். நெல்லிக்குப்பம் ஏ.எம்.எம்., அருணாசலம் மருத்துவமனையும், என்.எம்.சி.டி., தொண்டு நிறுவனமும் இணைந்து 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஒரு மாதம் இலவச சிலம்பம் பயிற்சி அளித்தனர். நிறைவு நாளில், பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. டாக்டர் பிரகதீஸ்வரன் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் ஜெயந்தி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். துணைத்தலைவர் கிரிஜா, மேலாளர் சத்யராஜ், துணை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், கணக்காளர் ஜெயலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, பயிற்சியாளர் தஷ்ணாமூர்த்தி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை