மேலும் செய்திகள்
தெய்வானை கல்லுாரி மாணவிகள் சாதனை
15-Feb-2026
விருத்தாசலம்: சிலம்பத்தில் அடிப்படை பயிற்சி பெற்ற பள்ளி, கல்லுாரி விடுதி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல பள்ளி, கல்லுாரி விடுதி பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு, தமிழ்நாடு நாகம் பதினாறு சிலம்பக் கலைக்கூடம் சார்பில் கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை சிலம்பம் அடிப்படை மற்றும் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தப்பட்டது. விடுதிகளில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விடுதி காப்பாளர் தேவி முன்னிலையில் விருத்தாசலம் சமூகநீதி விடுதி மாணவிகளுக்கு சிலம்பக் கலைக்கூட தலைவர் ரகுநாத், மாஸ்டர் கமேலஸ்வரன் மற்றும் பயிற்சியாளர் ஆனந்தி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
15-Feb-2026