உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐ.டி.ஐ., மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

ஐ.டி.ஐ., மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

கடலுார் : கடலுார் அரசு ஐ.டி.ஐ., மாணவிகளுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.கடலுார் செம்மண்டலத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு ஐ.டி.ஐ., துணை இயக்குனர் பரமசிவம், அரசு மகளிர் ஐ.டி.ஐ., முதல்வர் ஆதவபுருஷோத், நிலம் எடுப்பு தாசில்தார் கீதா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சிவசங்கரி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் குந்தவி பேசினர்.சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீகாந்த், பிரதிமா ஹரிடே, பவுலமி, மனிதவள மேலாளர் விஜயராஜன் அல்போன்ஸ், பவித்ரன் ஆகியோர் பயிற்சி முடித்த 147 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் கீர்த்தி சதுர்வேதி, பயிற்றுனர்கள் திலீப்குமார், கிருஷ்ணதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை