உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுப்பிரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம்

சுப்பிரமணியசுவாமி கோவிலில் தேரோட்டம்

கடலுார்: குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது.குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது.ஒன்பதாம் நாள் திருவிழாவில் விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியசுவாமி, சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் பஞ்சமூர்த்திகள் மாலை 3:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.பரம்பரை அர்ச்சகர்கள் சரவணன், கணபதி, சவுந்தர்ராஜன், சச்சிதானந்தம், பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை