உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செவிலியர்களுக்கு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்; முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

செவிலியர்களுக்கு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்; முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லூரியில் 2 ஆண்டு செவிலிய மாணவர்களுக்கான ஒளி விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் விழா நடந்தது. விழாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து பேசியதாவது:புதுச்சேரியில் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகள், செவிலியர் கல்லுாரிகள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு அடுத்து நோயாளிகளுடன் அதிக நேரம் இருந்து அவர்களின் நோயை குணப்படுத்துகின்ற முக்கியமான பணி இந்த செவிலியர் பணி. ரூ.54 கோடி செலவில் செவிலியர் கல்லுாரி கட்டப்பட்டு கல்லுாரிக்கு ஒப்படைக்கப்படும்.புதுச்சேரியில் இதுவரை 13 செவிலியர் கல்லுாரிகள் உள்ளது. மேலும் இரண்டு கல்லுாரிகள் வரவுள்ளது. வருடத்திற்கு 1,500 மாணவர்கள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரும். சுகாதார துறையில் கடந்தாண்டு 256 செவிலியர் பணியிடங்கள், என்.ஆர்.எச்.எம்., பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.விரைவில் 50 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த கல்லுாரிக்கு 254 பேர் எடுப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. பல தனியார் மருத்துவமனைகள், கல்லுாரிகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியம் வழங்குவதாக கேள்விப்பட்டுள்ளேன். அவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையையும் அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை