உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

நெய்வேலி தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட புலியூர், கீழூர், வானதிராயபுரம், வடக்குத்து, பெருமத்துார் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. அமைச்சர் கணேசன், விஷ்ணுபிரசாத் எம்.பி., சபா ராஜேந்தின் எம்.எல்.ஏ., கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பங்கேற்று 5 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். முகாமில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன், தாசில்தார் விஜய்ஆனந்த், ஒன்றிய செயலாளர் குணசேகரன்,மாவட்ட பிரதிநிதி ராமவெங்கடேசன், சீனிவாசன், ராஜேசகர், கோவிந்தராஜ், ஏழுமலை, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் பாக்கியராஜ், இலங்கேஸ்வரன், ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி