மேலும் செய்திகள்
இன்றைய தினம் இனிதாய் கழியும்
12-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு இன்று மாணவர்கள் தேர்வு துவங்குகிறது. கல்லுாரி முதல்வர் முனியன், உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் ஆகியோரது கூட்டறிக்கை: நடப்பு கல்வியாண்டில், அண்ணாமலை பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான மண்டல விளையாட்டு மற்றும் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு தேர்வு நடக்கிறது. அதன்படி, கல்லுாரியின் பின்புறம் உள்ள மினி ஸ்டேடியத்தில், மாணவிகளுக்கு காலை 9:45 முதல் 11:15 மணி வரையும், மாணவர்களுக்கு 11:30 முதல் பிற்பகல் 1:00 மணி வரையும் தேர்வு நடக்கிறது. நாளை மறுநாள் (25ம் தேதி) கைப்பந்து போட்டி, 4ல் கபடி, 5ல் ஹாக்கி, 6ல் வாலிபால், 7ல் கால்பந்து, 8ம் தேதி தடகளப் போட்டிகளுக்கு தேர்வு நடக்கிறது. அதுபோல், உள் அரங்கப் போட்டிகளான குத்துச்சண்டை, பென்சிங், ஜூடோ, சதுரங்கம், கேரம் போன்ற போட்டிகள், இன்று (24ம் தேதி) மாணவிகளுக்கு காலை 9:45 முதல் 11:15 மணி வரையும், மாணவர்களுக்கு 11:30 முதல் பிற்பகல் 1:00 மணி வரையும் இயற்பியல் துறை வளாகத்தில் தேர்வு நடக்கிறது. மேலும், முதல்வர் கோ ப்பை விதிகளின்படி, ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். மாணவர்கள் சீருடையில் மட்டுமே வர வேண்டும். கல்லுாரி அடையாள அட்டை அல்லது முதல்வர், துறைத் தலைவர் பரிந்துரை கட்டாயம் தேவை. குறித்த நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாக தேர்வு நடக்கும் இடத்தில் உடற்கல்வி இயக்குனரிடம் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நேரம், தேதி தவிர்த்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. கால்பந்துக்கு ஷூ அணிந்து வர வேண்டும். ஹாக்கி போட்டிக்கு ஹாக்கி பேட் எடுத்து வர வேண்டும். நடப்பு விளையாட்டு விதிகளின்படி தேர்வு நடக்கும். மாற்றம் ஏதேனும் இருப்பின் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படும். 01.07.2000 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
12-Jul-2025