டிராக்டரில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து, குழந்தை பரிதாபமாக இறந்தது.பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 32; இவரது, மகன் நபேஷ், 3. கணேசமூர்த்தி நேற்று மாலை நபேஷை, டிராக்டரில் உட்கார வைத்துக் கொண்டு வயலில் ஏர் உழுதார். அப்போது டிராக்டரில் இருந்த நபேஷ், தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த நபேஷ் சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.