பராமரிப்பின்றி சிறுவர் விளையாட்டு பூங்கா
மந்தாரக்குப்பம்,: கெங்கைகொண்டான் பேரூராட்சி கே,வி,ஆர்., நகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த சிறுவர் பூங்காவில் சிறுவர்கள், குழந்தைகள் விளையாட ஏணி, ஊஞ்சல், சருக்குமரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது பூங்கா பராமரிப்பின்றி இருப்பதால் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும், சிறுவர் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையும், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் சிறுவர்கள், மாணவர்கள் பூங்காவில் விளையாட முடியமால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சிறுவர்கள் நலன் கருதி பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.