மேலும் செய்திகள்
புத்தேரி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
19-Dec-2024
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், அனுமன் ஜெயந்தி மற்றும் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரகாரத்தில் உள்ள அனுமன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அமாவாசையை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இக்கோவிலில் சொர்ணாபிேஷகம் நடக்கிறது. அதனையொட்டி, அன்று விடியற்காலை 5:00 மணிக்கு, உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு திருமஞ்சனம்; 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. 7:00 மணிக்கு முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சொர்ணாபிேஷகம் நடத்தி, பக்தர்களுக்கு நாணயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விடியற்காலை 4:30 மணிக்கு மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்; 5:00 மணிக்கு வேதமந்திரங்கள், திவ்ய பிரபந்தம் முழங்க 'சொர்க்கவாசல் திறப்பு' உற்சவம் நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.
19-Dec-2024