உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கிறிஸ்து பிறப்பு விழா

 கிறிஸ்து பிறப்பு விழா

கடலுார்: கடலுார் துாய இருதய நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா நடந்தது. கடலுார் புதுப்பாளையம், துாய இருதய நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற இயேசு பிறப்பு நாடகம் மற்றும் தஞ்சாவூரு பொம்மை நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஜான்தாஸ், சிறப்பு அழைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், குழந்தை நலக்குழு உறுப்பினர் இளங்கோ சிறப்புரையாற்றினர். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கபிலன், சமூகநீதி பாசறை செயலாளர் எமல்டா ஜோ சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா நடனம், மாணவர்கள் நடன நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி தலைமைஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ