உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி

துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலுார்: கடலுாரில் தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில், துாய்மையே சேவை- 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசின் துாய்மையே சேவை- 2025, விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி துவங்கி, வரும் 2ம் தேதி வரை நாடு முழுவதும் நடக்கிறது. மக்கள் தங்களது சுற்றுப்புறங்களையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள, கழிவுகள் ஒழிப்பு, குப்பை பிரித்தெடுத்தல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல். சுத்தமான, ஆரோக்கியமான இந்தியா என்ற இலக்கை அடைவதே இதன் நோக்கம். இதன் ஒரு பகுதியாக கடலுார் திருப்பாதிரிப்புலியூர், சுப்புராய செட்டித் தெருவில் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில், கடலுார் துணை வட்டார அலுவலகத்தின் தலைமை அதிகாரி ஆஷிஷ் நாராயண் மேற்பார்வையில் மஞ்சக்குப்பம், அண்ணா மைதானத்தில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, புள்ளியியல் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ