துாய்மையே சேவை திட்டம் மரக்கன்று நடும் விழா
கடலுார்: கடலுார் டவுன்ஹால் அருகில், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் சார்பில் துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடந்தது.நிர்வாக இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் அனு முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.அப்போது, பொது மேலாளர் நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் புகழேந்தி, தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.