மேலும் செய்திகள்
பயிற்சி முகாம்
01-Sep-2024
கிள்ளை : துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மைய காடுகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.பேரூராட்சி துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் தலைமைதாங்கினார். சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது வரவேற்றார். துாய்மைப் பணியை, சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் மற்றும் கிள்ளை பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் 100 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அகற்றினர்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் ஆகாஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், அண்ணாமலை பல்கலைக்கழகபேராசிரியர் ராமநாதன், பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Sep-2024