மேலும் செய்திகள்
மாவட்ட கல்வி அலுவலர் நகராட்சி பள்ளியில் ஆய்வு
18-Jul-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் படிப்பில் பின்தங்கிய 143 மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகிறது. இதனை நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். மாணவிகளின் வாசிப்பு மற்றும் எழுதும் திறனை ஆய்வு செய்தார். சில மாணவிகள் தமிழில் எழுத சிரமபட்டனர். மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார். மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், தலைமை ஆசிரியை பூங்கொடி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய கட்ட டத்தை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆலை ரோட்டில் புதிய கடைகள் கட்ட பள்ளம் தோண்டி 3 மாதமாகியும் பணி து வங்காத இடத்தை பார்வையிட்டு உடனே பணியை துவக்க உத்தரவிட்டார். வி.ஐ.பி., நகரில் புதிய தா ர்சாலையை தோண்ட செய்து, சரியான அளவுக்கு உள்ளதா என ஆய்வு செய்தார். சேர்மன் ஜெயந்தி, கமிஷ்னர் கிருஷ்ணராஜன், பணி மேற்பார்வையாளர் ரமேஷ், தி.மு.க.,தலைமை பொதுக் குழு உறுப்பினர் ராதாகிரு ஷ்ணன், வி.சி., நகர செயலாளர் திரு மாறன் உடனிருந்தனர்.
18-Jul-2025