மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் ஆய்வு
11-Jul-2025
கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா குழந்தைகள் சேவை இல்லத்தின் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் சமூக நீதி அரசு மாணவர் விடுதியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வருகை தந்தார். இரு விடுதிகளிலும் போதிய பாதுகாப்பு, உணவு, குடிநீர், இட வசதிகள், தங்கும் அறை, மின் விளக்கு, கழிப்பறை வசதி, சமையலறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். விடுதி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, தொடர்ந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மாணவர்கள் வருகை பதிவேடு, மாணவர்கள் எண்ணிக்கை, உணவு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். அன்னை சத்திய குழந்தைகள் சேவை இல்ல மாணவிகள் தற்காப்புக் கலைகளை கலெக்டரிடம் செய்து காண்பித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, பி.ஆர்.ஓ., நாகராஜபூபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
11-Jul-2025