உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுப் பதிவு இயந்திரம் கலெக்டர் திடீர் ஆய்வு

ஓட்டுப் பதிவு இயந்திரம் கலெக்டர் திடீர் ஆய்வு

கடலுார் : கடலுாரில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் கூறுகையில், 'இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை திறந்து ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ள இடம் குறித்து தெளிவுபடுத்துதல், வெளிப்படை தன்மை குறித்து தெரிவிக்கப்படுவதாகும்.இது போன்று ஒவ்வொரு காலண்டிற்கும் ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்படுகிறது' என்றார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் திருநாவுக்கரசு, தேர்தல் பிரிவு தாசில்தார் சுரேஷ்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி