உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட் சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் முதற்கட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா முன்னிலை வகித்தார். கமிஷனர் கிருஷ்ணராஜன் வரவேற்றார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முகாமை துவக்கி வைத்தார். இதில் 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகளை வழங்கினர்.முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்த மனுதாரருக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து சான்று வழங்கினர். திருக்கண்டேஸ்வரம் பள்ளி மாணவர்கள் நுாலகத்திற்கு புத்தகங்கள் கேட்டு மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவின்படி, 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை உடனடியாக வழங்கினர். ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ அடையாள அட்டை வழங்கப்பட்டது.தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன், வி.சி., கர செயலாளர் திருமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ