மேலும் செய்திகள்
தாயுமானவர் திட்டம் துவக்கம்
13-Aug-2025
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார். பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே பேரூராட்சி சார்பில், நீர் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின், அவர் கூறிய தாவது: கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்ற னர். சுற்றுலா பயணிகள் மற்றும் பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக பரங்கிப்பேட்டை கடற்கரை அருகே நீர் விளையாட்டு வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்து இருக்கும். இங்கு, சிறுவர்களுக்கான நீர் விளையாட்டுகள், பெரியவர்களுக்கான கயாக்கிங் போட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய படகு குழாம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பூங்கா உள்ளது. சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சத்தான, பாரம்பரிய உணவுகளை வழங்கும் வகையில் சிறுதானிய உணவு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில், சப் கலெக்டர் கிஷன்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ், துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், செயல் அலுவலர் மயில்வாகனன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர் ராஜேஸ்வரி வேல்முருகன், தலைமை எழுத்தர் தமிழரசி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Aug-2025