உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் ஆய்வு

மனுக்கள் மீது நடவடிக்கை கலெக்டர் ஆய்வு

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூக நலத்துறை, வேளாண்மை துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஹிந்து சமய அறநிலையத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் உட்பட பல்வேறு துறைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்த பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ