உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம் கடலுாரில் கலெக்டர் ஆய்வு

நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம் கடலுாரில் கலெக்டர் ஆய்வு

கடலுார் : 'நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். கடலுார், முதுநகர் சங்கரன் தெரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சான்றோர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025ம் கல்வி ஆண்டில் 275 நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8 ம் வகுப்பு பயிலும் 14, 829 மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அடிப்படைத் திறனறி தேர்வு நடத்தப்பட்டது. இதில், சிறப்பு கவனம் தேவைப்படும் 3,536 மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.'நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களில் தேவையான அடிப்படை கல்வியை கற்றுக் கொடுப்பதாகும். இவ்வாறு அவர் கூறினார்.வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ