உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கல்லுாரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 கல்லுாரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வடலுார்: வடலுாரில் கல்லுாரி விரிவுரையாளர்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லுாரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைத்த மற்றும் நீதிமன்ற ஆணைப்படி ஊதியம் வழங்குவது வேண்டும், பணி பாதுகாப்பு, மகளிர் பேறுகால விடுப்பு, ஓய்வு பெறும் பயன் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்லுாரி முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விரிவுரையாளர்கள் கண்ணில் துணி கட்டி, கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ