உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

நடுவீரப்பட்டு: பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் இறந்தார்.தர்மபுரி மாவட்டம், பாடி கிராமம், ஆண்டிக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரவிவர்மன்,19; சேலம் மாவட்டம், ஆத்துாரில் உள்ள கல்லுாரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், காடாம்புலியூரில் வசிக்கும் சக மாணவர் வசந்த், 19; என்பவருடன் நேற்று பைக்கில் பண்ருட்டி சென்று கொண்டிருந்தார்.பைக்கை வசந்த் ஓட்டினார். வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வந்த போது, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், எதிரில் வந்த லாரி ஏறி இறங்கியதில் ரவிவர்மன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வசந்த் காயமின்றி தப்பினார்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை