உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குத்துச்சண்டை, வில்வித்தையில் அசத்தும் கல்லுாரி மாணவி

குத்துச்சண்டை, வில்வித்தையில் அசத்தும் கல்லுாரி மாணவி

கடலுார், ; பெண்ணாடம் அடுத்த இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் நிஷா. திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ்; 2ம் ஆண்டு படிக்கிறார்.இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மண்டல அளவில் ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லுாரியில் கடந்த வாரம் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் வென்றதன் மூலம் அகில இந்திய அளவில் நடக்கும் பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.கடந்த 2023ல் மும்பையில் நடந்த வில் அம்பு எய்தும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. பெற்றோர் கூலித்தொழிலாளியாக உள்ளதால் பல போட்டிகளில் பங்கேற்க மாணவிக்கு வறுமை ஒரு தடையாக உள்ளது. இவரது ஆர்வத்தின் காரணமாக கல்லுாரி மற்றும் கிராமத்தில் உள்ள ஆர்வலர்கள் சிலர் மாணவிக்கு உதவி செய்கின்றனர். போட்டிகளில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் ஏழை மாணவிக்கு வறுமை தடையாக இருந்தாலும், சாதிப்பதே எனது 'லட்சியம்' என பதக்கங்களை வென்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி