நினைவு தினம் அனுசரிப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கிளாங்காடு மணியார் குடும்ப பெரியவர் தெய்வசாமி, 18 ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. சேத்தியாத்தோப்பு பேரூராட்சி முன்னாள் தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கி, தெய்வசாமி படத்திற்கு மலர் துாவி, அஞ்சலி செலுத்தினார். பேரூராட்சி முன்னாள் தலைவர் பட்டு கணேசன், பிரபாகரன், கரிகால்சோழன், வசந்தராஜன், மாரியப்பன் ரவி, கருணாநிதி, பாஸ்கர் தான்யா, ராஷ்மிகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க நிர்வாகி மணிமாறன், வீரமூர்த்தி, கமலக்கண்ணன், ராஜா, பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.