உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேச்சுவார்த்தையில் சுமூகம் தீக்குளிப்பு போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் சுமூகம் தீக்குளிப்பு போராட்டம் வாபஸ்

சிதம்பரம் : கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த கோரி அறிவித்த தீக்குளிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் நாளை (28ம் தேதி) தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மாலை அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கீதா தலைமை தாங்கினார். தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் சம்பந்தமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன், நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடராஜரத்தினசபாபதி, சோமகார்த்திகேயன், ஆபத்சகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது மற்றும் கொடிமரம் மாற்றுவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் போராட்டத்தை கைவிட வேண்டுமென, தாசில்தார் கீதா கூறினர்.இதனையேற்று தெய்வீக பக்தர்கள் பேரவையினர் தீக்குளிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை