கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டி; கடலுார் மாணவர்கள் சாம்பியன்
கடலுார், : அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ மற்றும் செஸ்போட்டிகள் பொறையார் டி.பி.எம்.எல்.,கல்லுாரியில் நடந்தது. இதில் டேக்வாண்டோ போட்டியில் கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி மாணவர்கள் பிரசன்னா, திருக்குமரன் தங்கப் பதக்கம், கிஷன்ராஜ், தமிழ்சுமந்தன் வெள்ளிப்பதக்கம், பாரதி, கவியரசன் வெண்கல பதக்கம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கடலுார் தேவனாம்பட்டினம் கல்லுாரி மாணவர்கள் அரவிந்தசாமி, மோகன்ராஜ், வினோத்குமார், பரத்ராஜ், தமிழரசன், கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து 25 புள்ளிகளுடன் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.பெண்கள் பிரிவில் 80க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றதில், கடலுார் அரசு கல்லுாரி மாணவிகள் ஹரிணி, தர்ஷினிதேவி, சுமித்ரா, சரவணன்பிரியதர்ஷினி, விவேகா, சந்தியா ஆகியோர் சேர்ந்து 22.5 புள்ளிகளுடன் வெற்றிபெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இணை இயக்குனர்வெங்கடாசலபதி, பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பை வழங்கினார்.கடலுார் தேவனாம்பட்டினம் கலைக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர்கள் குமணன், மாரிமுத்து உடனிருந்தனர்.