நிழற்குடை தேவை
திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - வெங்கடாஜலம், குடிக்காடு. வேகத்தடை தேவை பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தனசேகரன், பெ.பொன்னேரி. பஸ் நின்று செல்லுமா? பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி, கடலுார் செல்லும் பஸ் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ், பெண்ணாடம்.