விபத்து அபாயம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு–பாலுார் சாலையில் பல்லவராயநத்தம் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்த கடந்த மாதம் சாலையில் போலீசார் பேரிகார்டு வைத்தனர். இந்த பேரிகார்டில் தற்போது எவ்வித ஒளி பிரதிபலிப்பான்களும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இச்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பேரிகார்டு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். விபத்தை தவிர்க்கும் வகையில்பேரிகார்டில் ஒளி பிரதிபலிப்பான்கள் அமைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.