மேலும் செய்திகள்
எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Jan-2025
பரங்கிப்பேட்டை: மதுரையில் மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வென்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.மதுரையில், பள்ளி கல்வித் துறை சார்பில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான மாநில அளவில் விளையாட்டு போட்டி நடந்தது. இதில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று, பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை சேர்மன் தேன்மொழி சங்கர், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார்.விழாவில், துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், அலி, அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி நன்றி கூறினார்.
30-Jan-2025