உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்.,மறுசீரமைப்பு திட்ட ஆலோசனை   

காங்.,மறுசீரமைப்பு திட்ட ஆலோசனை   

காட்டுமன்னார்கோவில்:கடலுார் தெற்கு மாவட்ட காங்., சார்பில் காங்., இயக்க மறுசீரமைப்பு திட்டம்-2ன் கீழ் காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் மற்றும் நகரம் புதிய நிர்வாகிகள் தேர்வு விருப்ப மனு பெறுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உடையார்குடியில ் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி வரவேற்றார். நிகழ்ச்சியில் கன்னியாக்குமாரி மாவட்ட முன்னாள் தலைவர் உதையன், மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் பேசினர். நிகழ்ச்சியில் கட்சியின் மறு சீரமைப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்த விதிமுறைகளை எடுத்து கூறி, கட்சி பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் இருந்து 56 மனுகள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்படுபவர்கள் கட்சி தலைமையில் இருந்து அறிவிக்கப்படுவர். கூட்டத்தில் நிர்வாகிகள் குணசேகரன், சங்கர், அன்வர், ஜாகீர்உசேன், அண்ணாதுரை, செல்வம், கிருபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்