உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டி பாதை அடைத்து அட்டகாசம்

 கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டி பாதை அடைத்து அட்டகாசம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பள்ளி சுற்று சுவர் கட்டும் பணிக்காக கொண்டு வந்த கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டி, பாதையை அடைத்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் இடையர்குப்பம் நடுநிலைப் பள்ளிக்கு, சுற்று சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொண்டுவரப்பட்ட ஜல்லி, எம்.சேண்ட் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் கடந்த 10 நாட்களாக பலாப்பட்டு, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கொட்டி பாதையை அடைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலை வழியாக செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். இடையர்குப்பம் மாரியம்மன்கோவில் திருவிழா நடக்க உள்ளதால், சுவாமி வீதி உலா செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அதிகாரிகள் பள்ளி சுற்றுசுவர் கட்டும் பணியை விரைந்து முடித்து, சாலையில் கொட்டியுள்ள கட்டட பொருட்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை