கனிம வள நிதி திட்டங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கனிம வள நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடலுார் மாவட்டத்தில் கனிமவள அறக்கட்டளை நிதியின் வாயிலாக குடிநீர் வழங்குவதற்கான பணிகள், கல்வி சார்ந்த கட்டமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனிம அறக்கட்டளை நிதி மற்றும் பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டங்களின் வாயிலாக பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியினை குடிநீர், சாலை வசதி, நீர்பாசனம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஐயப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) ரமேஷ்குமார், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.