மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-Jun-2025
கடலுார்: கடலுாரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக் கழகம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். கடலுார் மண்டலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை உடன் நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிகையை வலியுறுத்தி மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் உண்ணா விரதம் இருந்தனர். போராட்டத்திற்கு சங்க மண்டலத் தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். கடலுார் மாவட்ட சி.ஐ.டி.யு தலைவர் கருப்பையன், பொது செயலாளர் புவனேஸ்வரன் கண்டன உரையாற்றினர். மண்டல நிர்வாகிகள் இளங்கோ, சுதர்சன்பாபு, பழனிவேல் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜமுருகன், சங்கர், பீமாராவ் பாபுஜி, தினகரன், ஜெயபிரகாஷ், ராஜன், விஜயக்குமார், பிரபு, வாசுதேவன், செந்தில்குமார், ஜீவானந்தம், சாவித்திரி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
28-Jun-2025