காப்பர் ஒயர் திருடியவர் கைது
சிறுபாக்கம்: விவசாய மின் மோட்டாரிலிருந்து காப்பர் ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர். சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 50; விவசாயி. இவர், நேற்று காலை, 11:30 மணியளவில் தனது வயலுக்கு சென்றார். அப்போது, விவசாய கிணற்றிலிருந்த மோட்டாரில் காப்பர் ஒயரை மர்மநபர் ஒருவர் திருடி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தகவலில் வந்த சிறுபாக்கம் போலீசார், மர்மநபரை மடக்கி பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த சின்ன பர்கீஸ்த்ராஜ், 36; என்பதும், விவசாய கிணற்றில் இருந்த மோட்டாரில் 1.50 கிலோ காப்பர் ஒயரை திருடியதும் தெரிந்தது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.