மேலும் செய்திகள்
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒத்திவைப்பு
24-Aug-2024
கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. சேர்மன் பக்கிரி தலைமைதாங்கினார். துணைத் தலைவர் அய்யனார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும்,பி.டி.ஓ., க்கள் பார்த்திபன், வீரமணி முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியது:குருநாதன் (அ.தி.மு.க.,); 2024-2025ம் ஆண்டிற்கான 15வது நிதிக்குழு மானியத்தில் கவுன்சிலர்களுக்கு தகவல்தெரிவிக்காமல் சாலை, போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது.டெண்டர் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களுக்கு மட்டுமே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர் என்றார். இதே கருத்தை மற்ற கவுன்சிலர்களும் வலியுறுத்தி ஒன்றிய சேர்மன் பக்கிரி, வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சேர்மன் பக்கிரி பேசுகையில், 'அனைவருக்கும் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகே டெண்டர் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.ஞானசுவுந்தரி (பா.ம.க.,): செம்மங்குப்பம் ஊராட்சியில் இயக்கும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. சிப்காட் தொழிற்சாலையால் மக்கள் உடல்நலம் பாதிக்கின்றனர். மருத்துவவசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திகேயன்(தி.மு.க.,): கூட்டத்தில் கவுன்சிலர்கள் 5 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுபோன்ற விதிமுறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வேண்டும். மேலும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில்கவுன்சிலர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.சுபாஷினி (வி.சி.,): கோண்டூர் ஊராட்சியில் தெரு மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. சுகாதார சீர்கேடு உள்ளது. பன்றிகள் அதிகளவில் உலா வருகிறது கட்டுப்படுத்த வேண்டும்.ஜெயா சம்பத் (வி.சி.,): சின்னகங்கணாங்குப்பம் ஊராட்சியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அகற்ற வேண்டும்.உச்சிமேடு, பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் 100 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முரளி (பா.ம.க.,): கேப்பர் மலை பகுதியில் 7 தனியார் குடிநீர் தொழிற்சாலைகள் உள்ளது. இந்ததொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறி அதிகளவில் குடிநீர் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம்பாதிக்கிறது.இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீர் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிறைவாக சேர்மன் பக்கிரி பேசுகையில், கூட்டடத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.
24-Aug-2024