உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி காவல் நிலையம் முன் மகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி

திட்டக்குடி காவல் நிலையம் முன் மகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி

திட்டக்குடி : திட்டக்குடி, தேரடி வீதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி அனிதா, 40; இவர் தனது கணவர் மற்றும் மகள் சஷ்விகாஸ்ரீ, 13; என்பவருடன், திட்டக்குடி காவல் நிலையம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அனிதா குடும்பத்திற்கும், அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், 48; என்பவருக்கும், வீட்டுமனை தொடர்பாக பிரச்னை உள்ளது.கடந்த 21ம் தேதி நிலஅளவையர் மூலம் அளவீடுசெய்தபோது, ஒரு பகுதி சுவர் இருவருக்கும் பொதுவாக அளவீடு செய்யப்பட்டது. தற்போது வீடு கட்டும் பணியைதுவங்கியுள்ள வேல்முருகன்,பொது சுவரை இடிக்க முயன்றதால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பொது நபர் மூலம் மீண்டும் அளவீடு செய்து பிரச்னையை தீர்த்துக்கொள்ளுமாறு சமாதானம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை