உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏகநாயகர் கோவில் பசு மடத்தில் மாட்டு பொங்கல்

ஏகநாயகர் கோவில் பசு மடத்தில் மாட்டு பொங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீபகவான் மகாவீர் பசு மடத்தில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, ஸ்ரீஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரியந்த், மாணவ், பிரணவ், நிவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பெரம்பூர் பாரஸ் மல்ஜி போரா, முன்னாள் நகராட்சி சேர்மன் வள்ளுவன், ஷரத் ஷா ஷரப், நேமிசந்த் ஜி கட்டோடு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.கணக்காளர் பழனி, பசுமட தலைவர் நீரஜ் ஜெயின் மற்றும் அரசியல் கட்சியினர், வர்த்தகர் சங்கத்தினர், அரிமா, ரோட்டரி சங்கத்தினர், ஏகநாயகர் வழிபாட்டு மன்றத்தினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை