உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெடுஞ்சாலையில் திரியும் மாடுகள் வாகன ஓட்டுகள் கடும் அவதி 

நெடுஞ்சாலையில் திரியும் மாடுகள் வாகன ஓட்டுகள் கடும் அவதி 

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு, காடாம்புலியூர், கொஞ்சிக்குப்பம், கொள்ளுக்காரன்குட்டை, கீழக்கொல்லை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதேப் போன்று, மருங்கூர், முத்தாண்டிக்குப்பம், கீழக்குப்பம்-காட்டுக்கூடலுார் மாநில நெடுஞ்சாலையிலும் ஆங்காங்கே மாடுகள் படுத்து உறங்கியும், சுற்றியும் திரிகின்றன. குறிப்பாக, மாலை 4:00 மணி முதல் இரவு நேரங்களில் சாலையில் படுத்து உறங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. மாடுகள் சகட்டுமேனிக்கு திரிவதால் நாளுக்கு நாள் விபத்துகள் ஏற்படுவது அதிகமாக உள்ளது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை ஊராட்சி நிர்வாகங்கள் பிடித்து பட்டியில் அடைத்து மாட்டின் உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !