உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் - சுபா உப்பலவாடி சாலைப் பணி கிடப்பில்; டெண்டர் விட்டும் பணி துவங்கவில்லை

கடலுார் - சுபா உப்பலவாடி சாலைப் பணி கிடப்பில்; டெண்டர் விட்டும் பணி துவங்கவில்லை

கடலுார் ; கடலுார்-சுபா உப்பலவாடி சாலை டெண்டர் விட்டும் பணி துவங்க தாமதமாகி வருவதால் பொதுமக்கள் அவதி தொடர்ந்து வருகிறது.கடலுார்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், பெரியகங்கணாங்குப்பத்தில் இருந்து சுபா உப்பலவாடி கடற்கரை வரை செல்லும் சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் காணாமல் போனது. சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இச்சாலையில் பெரிய கங்கணாங்குப்பம், சரஸ்வதி நகர், உச்சிமேடு, தியாகுநகர், நாணமேடு, சுபா உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இணைந்துள்ளன. இப்பகுதி முழுவதும் விவசாயம் செய்வதால் விளைபொருட்களை இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கடலுார் மார்க்கெட்டில் விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.ஆனால் இந்த சாலை கந்தலாகியுள்ளதால் விவசாயிகளால் விளை பொருட்களை ஏற்றிவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, சாலையை சீரமைக்க 4 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியது. அதற்கான டெண்டரும் கடந்த மாதமே விடப்பட்டுவிட்டது. மழைக்கு முன்பாக பணியை துவங்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதன்படி சாலைப்பணிகள் துவங்கவில்லை. அதனால் பல ஆண்டுகளுக்கு பின் கிடைத்த சாலை போட அனுமதி மற்றும் நிதி கிடைத்தும் கிராம மக்களுக்கு சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லையே என மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி