அ டையாள சின்னங்களை இழந்து வரும் கடலுார் மாநகரம்
கடலுார் மாநகர மையத்தில் இருந்த சுப்ராயலு ரெட்டியார் பூங்கா கடலுார் மக்களுக்கு மிகனும் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகள், பெரியோர்கள் என பொழுதை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வந்தது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டிக்கான நிதி ஒதுக்கீட்டில் பூங்காவிற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூங்கா பின்பக்கம் உள்ள மைதானத்திற்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது இந்த பூங்கா மீண்டும் புதுப்பிக்க மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி தற்போது சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் பூங்கா ஓரமாக நிறுவப்பட்டிருந்த முன்னாள் சேர்மன் பாஷ்யம் ரெட்டியார் உருவ சிலையை ஒப்பந்ததாரர்கள் அடியோடு இடித்து அகற்றிவிட்டனர். அந்த இடத்தில் கான்கிரீட் பில்லர் போடும் பணி நடந்து வருகிறது.மீண்டும் அதே இடத்தில் பாஷ்யம் ரெட்டியார் சிலை வைக்கப்படுமா, அல்லது இடித்து அகற்றியதோடு விட்டுவார்களா என தெரியவில்லை. இதனால் பழமை வாய்ந்த கடலுார் மாநகரம் புரதான சின்னங்களை இழந்து வருகிறது.