உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாத்தனுாரில் கூடுதல் தண்ணீரை திறக்கக் கூடாது கடலுார் விவசாயிகள் வலியுறுத்தல்

சாத்தனுாரில் கூடுதல் தண்ணீரை திறக்கக் கூடாது கடலுார் விவசாயிகள் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம் : சாத்துனுார் அணையில் இருந்து ஒரே நேரத்தில் அதிகளவு உபரி நீரை திறக்கக் கூடாது என, கடலுார் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை அடுத்த சாத்தனுாரில் பெண்ணையாற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் ஒரே நேரத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அணையின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்துக்கும் மேலான கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த சொர்ணாவூர் தடுப்பணை உடைந்து சேதமானது. குறிப்பாக, கடலுார்-ப கண்டை கஸ்டம்ஸ் சாலை யில் ஆங்காங்கே பெரிய அளவில் சேதமானது. நெல்லிக்குப்பம், கடலுார் உட்பட பல இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. தற்போது, சாத்தனுார் அணையின் மொத்த உயரமான 119 அடியில் 115 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து கடலுார் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டை போன்று இந்தாண்டு ஒரே சமயத்தில் அதிகளவு உபரி தண்ணீரை திறக்க கூடாது. தண்ணீர் வரத்துக்கு ஏற்றார் போல் படிப்படியாக தண்ணீரை திறந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். கடந்த ஆண்டு சேதமான சொர்ணாவூர் தடுப்பணை, சாலைகளையே சரி செய்யவில்லை. எனவே அணைக்கு தண்ணீர் வருவதை கண்காணித்து தண்ணீரை முன் கூட்டியே திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை