மேலும் செய்திகள்
பிராமணர் சங்க கூட்டம்
23-Jul-2025
கடலுார்,: கடலுார் பூக்கடைக்காரர் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை ஒடிசாவில் போலீசார் கைது செய்தனர். கடலுார், மஞ்சக்குப்பம், பெண்ணையாறு ரோடு, சேட்டு மண் நகரைச் சேர்ந்தவர் ராமு மகன் அரவிந்த்,28; மஞ்சக்குப்பத்தில் பூக்கடை நடத்தினார். கடந்த ஜனவரி 25ம் தேதி இரவு பெண்ணையாறு ரோடு பரமசிவம் நகரில் உள்ள காலிமனை அருகில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது அவர்களுடன் புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலாஜி, 26; என்பவரும் மது அருந்தினார். அப்போது, அரவிந்த், பாலாஜி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலாஜி, கத்தியால் அரவிந்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்து, கடலுார் மத்தியசிறையில் அடைத்தனர். கடந்த ஏப்., 21ம் தேதி ஜாமினில் வெளியே வந்த பாலாஜி, கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இவரை பிடிக்க டி.எஸ்.பி.,ரூபன்குமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் நெப்போலியன், சிவக்குமார், சதீஷ்குமார்அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. ஒடிசா மாநிலம், ஜாய்ப்பூர் மலைப்பகுதியில் சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்த பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்து, புதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
23-Jul-2025