உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காய்கறி பயிர்கள் சாகுபடி; விவசாயிகள் ஊக்குவிப்பு

காய்கறி பயிர்கள் சாகுபடி; விவசாயிகள் ஊக்குவிப்பு

விருத்தாசலம்; விருத்தாசலம் உழவர் சந்தையில் 2025 - 26ம் ஆண்டிற்கான காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடந்தது.தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலை அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் முன்னிலை வகித்தார். இதில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பார்த்தசாரதி, எழிலரசன், பாஸ்கர், ஆதித்யா, உழவர்சந்தை அலுவலர் நதியா, வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்கள் சிவக்குமார், தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், காய்கறி பயிர்களின் பரப்பளவை அதிகப்படுத்துவதற்காக காய்கறி விதைகள், கத்தரி, மிளகாய், தக்காளிகளின் வீரிய ரக குழிதட்டு நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ