உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி 

 எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி 

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆத்மா திட்டத்தின் கீழ், எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பயிற்சியை துவக்கி வைத்து, எண்ணெய் வித்து பயிற்களில் புதிய ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மேலும், வேர்க்கடலை, எள், ஆமணக்கு ஆகிய பயிர்களின் முக்கிய ரகங்கள் மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண் பேராசிரியர் கலைச்செல்வி, எண்ணெய் வித்து பயிர்களில் ஆமணக்கு பயிரில் உள்ள உழவியல் தொழில்நுட்பங்கள், களை மேலாண்மை, உரம் மற்றும் சாகுபடி குறிப்புகள் பற்றி விளக்கினார். பேராசிரியர் கண்ணன், எண்ணெய் வித்து பயிர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இணை பேராசிரியர் சந்திரநாராயணன், புதுக்கூரைப்பேட்டையில் உள்ள புதிய பண்ணையில் நிலக்கடலை நடவு, குறித்து விவசாயிகளை நேரில் அழைத்து சென்று விளக்கினார். பண்ணை மேலாளர் குமார், தொழில்நுட்ப வல்லுநர் மீனலட்சுமி ஆகியோர் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள மாதிரி திடல்கள் அதன் செயல் விளக்கங்கள் மற்றும் பலா, முந்திரியில் ஒட்டு கட்டும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். இதில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை