மருத்துவ பணியாளர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
கடலுார்: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சைபர் கிரைம் போலீசார், சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவஅலுவலர் கவிதா, கண்காணிப்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கி, இணையவழி குற்றங்கள், ஓ.டி.பி.,மோசடிகள், சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள், போலி வேலைவாய்ப்பு குற்றங்கள் வங்கி கணக்குகளில் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.